மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் - வரும் 25ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக கோவையில் தொழில் அமைப்பினர் அறிவிப்பு

மின் கட்டண உயர்வு தொடர்பாக வரும் 25 ஆம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக, கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளதாக தொழில் அமைப்பினர் கூறினர்.

தமிழ்நாடு தொழில் அமைப்பினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது பேசிய அவர்கள், பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகின்றனர்.

கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது.

மேலும் வருடா வருடம் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு இருத்தல் வேண்டும். 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.

பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருவதாக வேதனை அளிக்கிறது.இது குறித்து தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில்,வரும் 25 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

இதனால் சுமார் 1500 கோடி வருவாய் இழக்க வாய்ப்புள்ளது. பலரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்று தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...