உலக அல்சைமா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ, மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.


கோவை: உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ,மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



வாக்கத்தான் நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அல்சைமா நோய் குறித்து செவிலியர் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ரேஸ் கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

அல்சைமா நோய் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயாகும்.நாட்கள் செல்ல செல்ல மறதி அதிகரித்து பாதிப்பு உண்டாக்கும். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள், முதியோர்கள் இந்த அல்சைமா நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதனை ஆரம்ப காலகட்டத்தில் சரி செய்வதற்காக இன்று உலக அல்சைமா தினத்தையொட்டி இந்த வாக்கத்தான் நிகழ்வானது நடைபெற்றது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...