திருப்பூரில் கணவன் சந்தேகப்பட்டு சண்டை - மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் கணவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த மனைவி, தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து உறவினர்களுக்கும் தோழிகளுக்கும் அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: மனைவி உயிரிழப்புக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த செட்டிபாளையம், பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சொர்ணகலா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவரின் சந்தேகத்தால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏர்படதாக தெரிகிறது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினரின் சமரசத்தை தொடர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மனமுடைந்த சொர்ணகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது சாவிற்கு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என தனது செல்போனில் வீடியோ பதிவிட்தோடு, தனது மகளை தனது பெற்றோரும் தனது இரு தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி அந்த வீடியோவை தனது தோழிகளுக்கும்., குடும்பத்தாருக்கும்., அனுப்பிவிட்டு விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் சொர்ணகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் சொர்ணகலாவின் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அவரின் கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...