தாராபுரத்தில் இன்று மட்டும் 69 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாராபுரத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 69 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இடம்பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்தது.

இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம், கோவிந்தாபுரம் சத்திரம் தென்தாரை அனுமந்தாபுரம் உள்ளிட்ட இடங்களில் ½ அடி முதல் 7 அடி வரையிலான 69 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடிய அசைத்து துவக்கி வைத்தார்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை,அவல், பொறி, பழங்கள் படையலாக வைக்கப்பட்டன.



இந்த நிலையில் இன்று மதியம் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் பொள்ளாச்சி ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது.



ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பூக்கடை கார்னர், ஜவுளிக்கடை வீதி சோழ கடைவீதி ஐந்து சாலை சந்திப்பு வழியாக தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.



பின்னர் அங்கு அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.



ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி, விஜயபாஸ்கர் உள்பட 300- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



நிகழ்ச்சியின் முன்னதாக பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...