மாநகராட்சிக்கு வரி செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும்

கோயம்புத்தூர் மாநகராட்சி  அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி வருவாய் பிரிவு சார்பாக கோவை மாநகராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 



 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளில் சொத்து வரி செலுத்தாத வரிதாரர்கள் உடனடியாக அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி வரி வசூலர்கள் அவர்களுடைய வார்டு பகுதிகளில் வரி செலுத்தாத நிலுவைதாரர்களிடம் தீவிர வரிவசூல் பணியில் ஈடுபட்டு 100 சதவீதம் வரி வசூல் செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறும், வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் காந்திமதி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சிறப்பு வரி ஆய்வாளர்கள், வரி வசூலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...