உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்கள்!

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர், அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவ பொம்மையை தூக்கில் தொங்கவிட்டு சென்ற நிலையில், போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியாரின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் சிலர் தூக்கில் தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.

சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவ பொம்மையை நள்ளிரவில் மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இரவு 9.30 மணி அளவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளனர்.

இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவ பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் திமுக மற்றும் பாஜகவினர் மாறி,மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...