பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் தொழில் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பீக் ஹவர் கட்டணம், நிலை கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை,  திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் 70க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்கள்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதில் தொழில் துறையினருக்கு நிலைகட்டணம் மற்றும் பீக் ஹவர் கட்டணங்களை அதிகரித்தது.

இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தொழில் முனைவோர் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர்.



உண்ணாவிரத போராட்டத்தின் போது நிலை கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மின்வாரியத்திடமும், ஒழுங்குமுறை ஆணையத்திடமும், தமிழக அமைச்சர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும்நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அரசின் கவனத்திற்கும், தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் விதமாக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவதாகவும்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...