கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் பவுண்டரிகளை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் இயங்கி வரும் பவுண்டரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பவுண்டரிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: குரும்பபாளையம் அடுத்த பழனி கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள பவுண்டரிகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் 10-வது வார்டுக்கு உட்பட்ட பழனி கிருஷ்ணா கார்டன் பகுதிக்கு அருகில் 100 மீட்டர் தொலைவிற்குள் குடியிருப்பு பகுதியாக தர வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் வாடகைக்கு பல பவுண்டரிகள் இயங்கி வருகின்றன.



இந்த பவுண்டரிகளில் இருந்து கரும்புகையும், நச்சுப் புகையும் அதிக அளவு வெளிவந்து அருகில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் தொடர்புடைய பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.



இந்த பவுண்டரிகள் முறையான அனுமதி பெற்று இயங்குகின்றதா? என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. மேலும் எவ்வித மாசு கட்டுப்பாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை.

இது குறித்து பல ஆண்டுகளாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், முதலமைச்சர் தனிப்பிரிவு என மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து எச்சரித்து சென்ற பிறகும் பவுண்டரிகள் தொடர்ந்து புகையை வெளியேற்றி வருகின்றன.

மேலும் கரிய நிற நுண் துகள்கள் வீடுகளிலும், மரங்களிலும் படிகிறது. எனவே மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஆட்சியில் குரும்பபாளையம் பகுதி மக்கள் நச்சுப் புகை மற்றும் மணல் துகள்களை சுவாசிக்கும் அவலத்தில் இருந்து விடுதலை பெற்று சுத்தமான காற்றை சுவாசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் விதிகளுக்கு புறம்பாக வாடகைக்கு இயங்கி வருகின்ற அனைத்து பவுண்டரிகளையும் இப்பகுதியில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த வழிவகை செய்திட சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பலமுறை புகார் அளித்தும் நீங்கள் அறிவுறுத்தியும் எதற்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து இயங்கி பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்துவதோடு முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் பவுண்டரிகளுக்கு விடிவு கட்டாவிட்டால் பேரூராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...