தொண்டாமுத்தூரில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் தின்றுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் உள்ளது. மலை அடிவாரப்பகுதியில் இந்த கிராமம் உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே குப்பேபாளையத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு வந்தது. அதிகாலை 3 மணியளவில் வந்த யானையை கண்டு நாய்கள் அதிக அளவில் சத்தம் போட்டது.

இதனால் சுதாரித்துக் கொண்டு மக்கள், யானை வீட்டின் ஓடுகளை உடைப்பது கண்டு வெளியே ஓடினர். இதில்,வெள்ளிங்கிரி (43) மற்றும் நஞ்சன் (60) ஆகிய இருவரது வீடுகளை யானை சேதப்படுத்தியது.

மேலும் வீட்டின் உள்ளே இருந்த கோதுமை, அரிசி போன்றவற்றை தின்றது. சுமார் 1 மணி நேரம் அங்கே குட்டியுடன் யானை நின்றது.

தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை காட்டு பகுதிக்குள் விரட்டினர்.

சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக பழங்குடியினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பழங்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்க நிதி உதவி கொடுத்து உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...