அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசின் மீது பழி போடுவது, நம்முடைய இயலாமை - பாஜக தலைவர் அண்ணாமலை!

கோவையில் நடைபெற்ற நொய்யல் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நொய்யலை பாதுகாக்க முதலில் பிளாஸ்டிக் போன்றவற்றை நதியோரம் வீசி செல்லும் தவறை நாம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசின் மீது பழி போடுவது, நம்முடைய இயலாமை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவை பேரூர் பகுதியில் பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. 5ம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,



கரூர் காரனாக இருந்து இன்று இங்கு நின்று கொண்டு இருக்கிறேன். பேரூருக்கும் கரூருக்கும் ஒரு பந்தம் உள்ளது. காமதேனு பேரூர்பட்டீசுவரர் சாமியை தரிசனம் செய்து விட்டு நொய்யல் நதிக்கரை ஓரமாக வந்து கரூர் பசுவதீஸ்வரர் ஆலயத்தில் ஐக்கியமானார் என்பது சரித்திர செய்தி.

இந்தியாவில் NGO க்கள் மூலம் எத்தனையோ நதிகளை நாம் மீட்டெடுத்துள்ளோம். சபர்மதி நதி சாக்கடையாக இருந்தது. நம் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, கரும் பலத்தோடு சபர்மதி நதியை கையில் எடுத்து, இன்று சந்தனம் மனக்கின்ற நதியாக மாற்றி உள்ளார். நொய்யல் நதிக்கரையோரத்தில் வருகின்ற காலத்தில் இந்திய பிரதமரும் வேறு நாட்டு அதிபரும் அமர்ந்து பேசுவார்கள்.

பாலாறில் இது போன்று ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள் தற்போது அங்கு நீர் ஓடுகிறது. அரசு என்பது ஒரு இயந்திரம் தான், அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசின் மீது பழி போடுவது, நம்முடைய இயலாமை என்று தான் கூறுவேன். 99% அணைகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது.

திருப்பூர் பகுதிகளில் எல்லாம் அணைகள் பயனற்று போய்விட்டதாகவும் நச்சு பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினைகள் உள்ளன. தாமிரபரணி நதியை இந்தியாவில் மூன்றாவது நச்சு நதி என ஆய்வு கூறுகிறது. மற்ற மாநிலங்களை விட தொழில்துறை நம்பி இருக்கும் மாநிலம் நம் மாநிலம்.

கடந்த 60, 70 ஆண்டுகளாக நதிகளை நாம் நச்சுபடுத்தி உள்ளோம். அதனால் தான் அதிக நச்சு தன்மை உள்ள நதிகளில் தமிழகம் கடைசி இடத்திற்கு ஒரு படி முன்னிருக்கிறது. எனவே நாம் நமது Development Model யை Question செய்ய வேண்டி உள்ளது.

நம்முடைய Development Model என்பது, எந்த அளவிற்கு அடுத்த தலைமுறை வளங்களை இந்த தலைமுறை சுரண்ட முடியும், எந்த அளவிற்கு மாநகராட்சி, அரசு நிர்வாகம் தண்ணீரை சுத்தப்படுத்தி ஆற்றுக்குள் விட வேண்டிய பொறுப்பு இருக்ககூடிய மாநகராட்சிகளே எத்தனை இடங்களில் சுத்தபடுத்தாமல் தண்ணீரை விடுகிறார்கள் என்ற கேள்வியை கேட்க வேண்டும்.

அரசிடம் கோரிக்கை வைத்து தேர்தல் காலத்தில் வாக்குறுதியாக அளித்து இதனை சரிசெய்ய முடியாது என்பதை இவர்கள் 30 ஆண்டுகளாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் அரசு, அரசியலை தாண்டி நம்பிக்கையோடு நொய்யலில் கை வைக்க வேண்டும். முதலில் பிளாஸ்டிக் போன்றவற்றை நதியோரம் வீசி செல்லும் தவறை நிறுத்த வேண்டும்.

சங்க இலக்கியங்களில் நொய்யல் நதிக்கு காஞ்மா நதி என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. கொங்கு சமுதாயத்தின் ஒரு அடையாளமாக நொய்யம் நதி உள்ளது, 3.2 ட்ரில்லியன் டாலராக இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் 8 ட்ரில்லியன் டாலராக போகிறது. உலகின் மூன்றாவது நாடாகா மாறி விடுவோம்.

எவ்வளவு பெரிய நாடாக மாறினாலும் நதி இல்லை என்றால் அழகில்லை. சைனா போன்று மாறிவிடுவோம். 2047க்குள் உலகின் முதன்மை நாடாகா வரும் போது Average median age 50யை தாண்ட கூடாது என்பது பிரதமரின் முதல் சங்கல்பம். கனிமவளங்களை சுரண்டியும் இயற்கைக்கு கேடு விளைவித்தும் வளர கூடாது என்பதும் பிரதமரின் சங்கல்பம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் பேரூர் ஆதினம், இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...