ரயில்நிலையத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தை இடிப்பதா?- எம்.பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

ரயில்நிலையத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில், வடகோவை ரயில் நிலையத்தில் நல்ல நிலையில் உள்ள தரைத்தளத்தை அடியோடு பெயர்த்தெடுத்துவிட்டு புதிய தரைத்தளம் அமைக்க திட்டமிடும் ரயில்வேத்துறையின் ஊதாரித்தனமான செலவுகளுக்கு மக்கள் பணம் வீணாவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: ஆறு மாதங்களுக்கு முன்பு பல லட்ச்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட தரைத்தளம் தற்போது முழுவதுமாக பெயர்த்தெடுத்து இடிக்கும் பணிகளை ரயில்வே பொறியியல் துறை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் புகார் தெரிவித்துள்ளார்.

ரயில்நிலையத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில், வடகோவை ரயில் நிலையத்தில் நல்ல நிலையில் உள்ள தரைத்தளத்தை அடியோடு பெயர்த்தெடுத்துவிட்டு புதிய தரைத்தளம் அமைக்க திட்டமிடும் ரயில்வேத்துறையின் ஊதாரித்தனமான செலவுகளுக்கு மக்கள் பணம் வீணாவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகளை ஒன்றிய பாஜக அரசு பறித்துக்கொண்டது. இதனால் பல லட்சம் ரூபாய்கள் லாபம் வந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வியாக்கானம் தெரிவிக்கிறார்.

இப்படி மிச்சம் பிடிக்கிற மக்கள் பணத்தை ஊதாரித்தனமாக ரயில்வேத்துறை நல்ல நிலையில் உள்ள கட்டங்களை இடித்து, புதிய கட்டுமானங்களுக்கு திட்டமிடுகிற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதன்தொடர்ச்சியாகவே, வடகோவை ரயில் நிலையத்தில் உள்ள தரைத்தளங்கள் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் வடகோவை ரயில் நிலையில் பலமான காங்ரீட்டுகளை கொண்டு தரைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும், இங்குள்ள பெரும்பாலன கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளது.

இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு பல லட்ச்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட தரைத்தளம் தற்போது முழுவதுமாக பெயர்த்தெடுத்து இடிக்கும் பணிகளை ரயில்வே பொறியியல் துறை மேற்கொண்டு வருகிறது.

ரயில் நிலையத்திற்கு, ரயில் பயணிகளுக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை செய்ய மறுத்துவிட்டு, நல்ல நிலையில் இருப்பவைகளை இடிப்பது என ஊதாரித்தனமான செலவுகளை செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும். மேலும் மக்கள் பணத்தை வீணடிக்கிற ரயில்வே பொறியியல் துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...