இலவச வீட்டுமனை வழங்கக் கோரி சாலையோர வாசிகள் ஆட்சியரிடம் மனு

கோவை, டவுன்ஹால் அருகே சாலையோரத்தில் வசித்து வரும் குடும்பத்தினர் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூட்டு பின்புறம் சாலையோரத்தில் வசித்து வருபவர் சலீம் பாட்ஷா. உடல் ஊனமுற்ற இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளது. 

பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாலையில் தங்குவது சிரமமாக உள்ளது எனவும், சாலையோரத்தில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒன்று வழங்க வேண்டும் எனவும் சாதிக் பாட்ஷா இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும், எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட எவ்வித அடையாள அட்டைகளும் இல்லை என்பதால் அதனையும் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

இதேப்போன்று காந்திபார்க் பகுதியில் சாலையில் வசித்து வரும் மீனாட்சி உள்ளிட்ட குடும்பத்தினரும் தங்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 



அதில், தாங்கள் காந்திபார்க் அருகே சாலையோரத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், சாட்டையடித்து தொழில் செய்து வருவதாகவும், எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தைகளை பள்ளிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...