ஆதிக்கசாதியினரால் தொடர்ந்து தாக்கப்படுவதாக பலமுறை அளிக்கப்பட்ட மனுக்களை முக்காடாக போட்டு ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து அதிக்கசாதியினரால் தாக்கப்படுவதாகவும், காவல்துறையும் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் கூறி ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், கிணத்துக்கடவிற்கு உட்பட்ட தாமரைக்குளம், ரொட்டிக்கடை பகுதியில் நானும், எனது தம்பி முருகன் ஆகிய இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நான் கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். மேலும், சுயமாக தொழில் துவங்கி நடத்தி வருகின்றேன்.

நாங்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த 7 குடும்பத்தினர் ஒன்றிணைந்து எங்களை எப்படியும் அப்பகுதியில் இருந்து வெளியேற்ற நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், கடந்த 7.3.2017 அன்று எனது மனைவி மீது அப்பகுதி ஆதிக்கசாதியினர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த எனது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து புகார் மனுவை கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்தபோது காவல்துறையினர் எங்கள் மீதே வழக்கை பதிவு செய்து மிரட்டியதால் அதுகுறித்தான புகாரினை கோவை மண்டல ஐஜி-யிடம் வழங்கியுள்ளேன்.

இச்சம்பவங்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படுபவர் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் பணியாற்றி, தற்போது ஆனைமலை காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் பெற்றுள்ள சார்பு ஆய்வாளர் செல்வநாயகம். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே எங்களது குடும்பத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் எங்களையே வஞ்சித்து வருகின்றனர். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அம்மனுக்களை இணைத்து தலையில் முக்காடாக போட்டு மாவட்ட ஆட்சியரிடம் தாமரை வீரன் மனு அளித்தது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...