கோவையில் வரும் ஆகஸ்ட் 19, 20-ல் ஸ்டார்ட் அப் திருவிழா : மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தகவல்!

தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்டு 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கொடிசியா வளாகத்தில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெறவுள்ள ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிகழ்ச்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



தமிழகத்தின் புது தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுக தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்வினை நடத்துகின்றது.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகவும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் T.R.B.ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் சந்தித்த ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இயக்குனர் சிவராஜா ராமநாதன் கூறியதாவது,



புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மேலும், முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தொழில்முனைவோர்கள் தங்களது பயணத்தை பகிர்ந்து கொள்ளுதல் என பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில், தொழில்முனைவோர்கள் - முதலீட்டாளர்கள், தொழில் முனைவு வல்லுநர்கள் மற்றும் வழிகாட்டுநர்கள் ஆகியோரோடு கலந்துரையாடவும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் தொழில் கனவு என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...