சுதந்திர தினத்தை முன்னிட்டு சூலூர் அருகே நடைபெற்ற கிராமசபை கூட்டம் - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.


கோவை: சுதந்திர தினத்தினை முன்னிட்டு சூலூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கலந்து கொண்டார்.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.



மேலும் இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆசிக் அலி, ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ரகு(எ) துரைராஜ், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) காசிநாதன்,

மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி, ஊராட்சி செயலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி சதீஸ்குமார், சூலூர் வட்டாட்சியர் நித்திலவேணி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், இந்த முகாம்களில் கலந்துகொள்ள முடியாதவர்கள், விண்ணப்பங்கள் வழங்காமல் விடுபட்டவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவிதமாக இந்த மாதம் 18, 19, 20 ஆகிய நாட்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.

முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகின்றவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே, அவர்களும் இம்முகாம்களில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம்(கிராமம்),

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கம், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட 14 கூட்ட பொருட்கள் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுதல் உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். பல்வேறு துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும் ஊராட்சி செயலர் கிராம சபை கூட்டம் பொருள்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...