சுதந்திர தின விழா - பள்ளியில் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஆட்சியர்

திருப்பூரில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மரியாதை செய்தார். பின்னர் தான் பயின்ற பள்ளியின் ஆசிரியரின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.



திருப்பூர்: சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியதை செலுத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக்கல்லூரியில கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.



சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 34,36,633 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தான் படித்த பள்ளியின் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.



திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சுதந்திர தின விழாவில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தந்தையும், குணச்சித்திர நடிகருமான சின்னி ஜெயந்த் கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...