தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மனு!

தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் போக்குவரத்து பாதையில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் சுமார் 45 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்ல முடியும்.

இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் செந்தில் அரசன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...