நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் - கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு!

நாங்குநேரியில் ஜாதி ரீதியிலான வன்மத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவ போல், மீண்டும் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாங்குநேரி சம்பவம் போல் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை அகற்றும் வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை படிவத்தில் சாதி மத பிரிவு விவரங்கள் பெறுவதை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அகற்ற வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் கல்வி சலுகைகள் ஆகியவை குடும்ப வருவாய் சான்று அடிப்படையில் வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கைகள் இந்தியன் என்ற ஒரு அடையாளத்தில் வழங்கப்படும் என்ற திட்டத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் பள்ளி கல்லூரிகளிலும் அரசு சார்பில் விரைவான சர்வே நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...