‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ - கோவையில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்!

அவதூறு வழக்கில் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நேற்று, மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். இதனை கொண்டாடும் விதமாக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு, ‘நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


கோவை: அவதூறு வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கோவையில் ராகுல் காந்திக்கு நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரை காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ளனர்.

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார்.

இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் கோவை மாநகரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைபடத்தில் இடம்பெற்றுள்ள பிரபல வசனமான " நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், உக்கடம் ஆகிய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...