துடியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

துடியலூர் - வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சசிக்குமார் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஜீவானந்தம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார், இவர் தற்போது கோவை துடியலூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உணவு சாப்பிடுவதற்காக துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சசிக்குமார் பணம் தர மறுக்கவே கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டியதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...