மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் - பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்!

கோவை பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள், அவர்களது தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை என்று கூறினார்.



கோவை: மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



கோவை - அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாடினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



DMK என்ற மூன்று கண்டெடுத்த MKS என்ற அவர், இந்த AMP க்கு கொடுத்த பொறுப்பு தான், இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

பாரதியாரின் வாழ்க்கை PSG குழுமம் உண்மையாக்கி கொண்டு உள்ளதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக் கட்சியின் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தந்தை பெரியார் வந்து சென்ற ஒரு பள்ளிக்கூடம் இது. ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதம் பாடிய பள்ளி இது.

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோரால் பாராட்டு பெற்ற ஒரு பள்ளிக்கூடம் இது. 1921ம் ஆண்டு தீபாவளியன்று பீளமேட்டை சேர்ந்துள்ள இந்த பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த பள்ளி. இப்படிப்பட்ட பெருமைமிக்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும்.

பீளமேடு பகுதியை ஒரு முக்கியமான பகுதியாக மாற்றி காட்டியது கல்வி நிலையங்கள் தான். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல மனிதர்களை அளிப்பது எதுவென்று கூறினால் அது எங்கள் பள்ளிக்கல்வித்துறை தான்.

அகாடமிக் சார்ந்த பாடங்களை மட்டுமல்லாமல் மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பாடங்களையும் வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன். மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிள்ளைகளுடைய தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாக பார்க்கிறேன்.

மாணவர்கள் நீங்கள், உங்களுடைய பெற்றோர் ஆசிரியர் என்ன அறிவுரை கூறுகிறார்களோ அதனை மனதில் வைத்து கொண்டு இந்த வயது படிக்கின்ற வயது என்பதால் படிப்பில், கவனம் செலுத்துங்கள். நம்முடைய ஆசிரியர் பெற்றோர்க்கு பெருமையை தேடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...