நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் நகர்ப்புரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகள் குறித்தும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய கூட்ட அரங்கத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12524 ஊராட்சிப் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம், அவற்றின் அளவு மற்றும் நீர் இருப்பு குறித்தும் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக விரைவாக ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, பருவ மழை பொய்த்ததன் காரணமாக கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொது மக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் பொது மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித் தாள்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதுடன் குடிநீர் விழிப்புணர்வு குறித்த விளம்பர கையேடுகளையும் வெளியிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் க.பணீந்திரரெட்டி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அருண்ராய் உள்ளிட்டு பேரூராட்சிகள், ஊராட்சிகள், மாநகராட்சிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...