கோவையில் பொருத்தப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் - சேவையை தொடங்கி வைத்த காவல் ஆணையர்!

கோவை மாநகரில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் முதல் முறையாக 6 தானியங்கி வேக அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதன் சேவையை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட 6 தானியங்கி வேக அளவீடு கருவிகளின் சேவையை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



கோவை மாநகரில் முதல் முறையாக அவினாசி சாலை, சரவணம்பட்டி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் போக்குவரத்து விதியை மீறி வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது.



3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 வேக அளவீடு கருவி மூலம் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அபராதமும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.



இந்த மூன்று இடங்களில் உள்ள தானியங்கி வேக அளவீடு கருவிகள், கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்க உள்ளது.



தானியங்கி வேக கருவி மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் கண்டறியப்படும்.

இதனையடுத்து அந்த வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அபராத சலான் அனுப்பி வைப்பதோடு, உடனடியாக அபராதத்தை செலுத்த வலியுறுத்தப்பட உள்ளது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மாநகர போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...