கோவையில் மின் சாதன பழுது பார்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி - அரசிடம் வீடு வேண்டி கோரிக்கை!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (30) என்ற பார்வை மாற்றுத்திறனாளி, கடந்த 10 ஆண்டுகளாக மின்சாதனங்களை பழுது பார்க்கும் வேலை செய்து வரும் இவர், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மின்சாதன பழுது பார்க்கும் பார்வை மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார், தனக்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் உள்ளனர். இவருக்கு இரண்டு வயதாக இருந்த போது ஏற்பட்ட மூளை காய்ச்சலால் பார்வை பாதிக்கப்பட்டு சுமார் 6 வயதில் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் இது குறித்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதிலும் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அவரை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசு கண் பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு சிறிது காலம் இருந்த அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்து விட்டார். பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், வீட்டில் இருந்த மின் சாதனங்களை பழுது பார்த்து சரி செய்வது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை சரவணம்பட்டியில் குடியேறியுள்ளனர்.

இவரது ஆர்வத்தை பார்த்த அவரது அக்கா ரேவதி அருகேயுள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துள்ளார். அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை வாங்கி எழுதுவது, கடையில் யாரும் இல்லாத போது பார்த்துக் கொள்வது என இருந்துள்ளார்.

அப்போது தனது மின் சாதன பொருட்களை பழுது பார்ப்பதில் உள்ள ஆர்வத்தை கடை உரிமையாளரிடம் கூறியதால் சிறு, சிறு வேலைகளை அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கவனம் செலுத்தி எலக்ரிக் பணிகளை கற்று கொண்ட சுரேஷ்குமார் ஒரு கட்டத்தில் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, வாசிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதன பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்ய துவங்கினார்.

பிறகு வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இல்லாமல் மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வரும் சுரேஷ்குமார் தனது வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை சமாளித்து வருகிறார்.



இவரது தன்னம்பிக்கைக்கு வழு சேர்க்கும் விதமாக அவரது அக்கா ரேவதியின் முயற்சியாக கவுண்டம்பாளையம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக தனது சொந்த கடையை நடத்தி வருகிறார். இவருக்கு அவரது நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தன்னபிக்கை நாயகனாக வலம் வரும் சுரேஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தானும் தனது தாயாரும் தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும் தங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கிய நிலையில் அதற்கு 2 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டி உள்ளதால், அதனை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...