மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளை அகற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித உரிமை மீறல் செயலை தடுக்க தவறிய இன வெறியை ஊக்குவிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காமராஜ் பவனில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், டிவிஷன் தலைவர்கள் இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...