அப்துல்கலாமின் அடங்கிய கையடக்க புத்தகத்தை 7 மொழிகளில் உருவாக்கிய பொறியாளருக்கு குவியும் பாராட்டு!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேரளாவை சேர்ந்த கட்டுமான பொறியாளரான லூயீஸ் (42) என்பவர் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகத்தை 7 மொழிகளில் தயார் செய்துள்ளார்.


கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பொன்மொழிகள் அடங்கிய கையடக்க புத்தகத்தை 7 மொழிகளில் உருவாக்கிய பொறியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் 8ஆம் ஆண்டு நினைவுநாள் நாளைய தினம் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அப்துல் கலாம் நினைவு நாளில் கோவை - கேரளா எல்லையில் உள்ள பழங்குடி கிராம பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்.



அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கட்டுமான பொறியாளர் லூயீஸ் (42) என்பவர் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய 2 செ.மீ உயரம், 1.5 செ.மீ அகலம் என 64 பக்கங்கள் கொண்ட கையடக்க புத்தகம் தயார் செய்துள்ளார்.



தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெழுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், உள்ளிட்ட 7 மொழிகளில் அச்சிடப்பட்ட சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக வழங்க உள்ளதாகவும், ஆனைக்கட்டி, மாங்கரை, வயநாடு உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



விரைவில் 22 மொழிகளில் அவரது பொன்மொழிகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பொறியாளர் லூயீஸ் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...