உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை - மாவட்ட ஆட்சியர் உறுதி!

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மலைக்கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

உடுமலை வன குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உடல்நலம் குன்றியதால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க கடந்த வாரம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க டென்டர் கோரப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் சாலை வசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதி தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிச்சாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...