உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் மாடு பலியான சோகம் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த காட்டுப்பட்டி என்ற மலைவாழ் கிராமத்தில் சடையன் என்பவரது பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகளை காட்டு யானை தாக்கியதில் ஒரு மாடு அங்கேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள காட்டுப்பட்டி மலைவாழ் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் மாடு ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆனால் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் சாகுபடி பணிகளில் திறம்பட செயல்பட முடிவதில்லை. இந்த நிலையில் கால்நடை வளர்ப்பு அனைத்து சூழ்நிலையிலும் மலைவாழ் மக்களுக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.



இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.



அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியுள்ளது.



இதில் படுகாயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...