ஔவையாரின் கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி திருப்பூரை சேர்ந்த பெண் சாதனை!

திருப்பூரை சேர்ந்த மனோன்மணி என்ற பெண் ஔவையார் எழுதிய 91 வரிகள் கொண்ட கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளனர்.



திருப்பூர்: ஔவையார் எழுதிய கொன்றைவேந்தன் பாடலை தலைகீழாக பாடிய திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.



திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி என்ற பெண் சிறு வயது முதலே சிறிய சிறிய வார்த்தைகளை தலைகீழாக பேசி பல்வேறு நிலைகளில் பாராட்டுகளை பெற்றுள்ளார்.



இந்நிலையில் தனது அடுத்த கட்ட முயற்சியாக ஔவையார் எழுதி பாடிய கொன்றைவேந்தன் பாடலை முழுவதுமாக தலைகீழாக பாடி சாதனை படைத்துள்ளார்.



461 சொற்களோடு 91 வரிகள் கொண்ட பாடலை மூன்று நிமிடத்திற்குள்ளாக பாடி சாதனை படைத்த மனோன்மணிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்பினர் சான்றிதழ் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...