நவக்கரை அருகே இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை!

நவக்கரை அருகேயுள்ள வனப்பகுதியில் மற்றொரு விலங்குடன் நடந்த சண்டையில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்த நிலையில், உடலை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவ குழுவினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் நவக்கரை அருகே சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை அடுத்த அட்டமலை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து இறந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இறந்த சிறுத்தை சுமார் 1.5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பதும், வேறு ஒரு வனவிலங்குடன்ஏற்பட்ட மோதலில் சிறுத்தையின் பின்பகுதியில் கடித்து இழுத்ததில் குடல் வெளியே வந்து உயிரிழந்தது தெரியவந்தது.



மேலும் சிறுத்தையின் உடலில் ஆங்காங்கே வேறு விலங்கின் நகத்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் அதே அதிகாரிகள், வன ஆர்வலர்கள் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...