உடுமலையில் 3 நாட்களாக நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டம் வாபஸ் - ஆடி, பாடி கொண்டாட்டம்!

உடுமலை அருகே தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் உறுதி செய்ததை தொடர்ந்து மலைவாழ் மக்கள் 3 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்று ஆடி, பாடி கொண்டாடினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த 12ஆம் தேதி மலைவாழ் மக்கள் திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை சாலை அமைக்க அனுமதி வழங்காத உடுமலை வனத்துறை மற்றும் 2006 வன உரிமை சட்டத்தை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தை உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் 3வது நாளாக மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாவட்ட வன உரிமை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் போராட்ட குழுவினர், வனத்துறையினர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் திருமூர்த்திமலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5.37 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



பின்னர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் இனிப்புகள் வழங்கி மலைவாழ் மக்கள் பாரம்பரியமான இசைக்கருவிகள் இசைக்க மலைவாழ் மக்கள் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த மழைவாழ் மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. உடுமலையில் மலைவாழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...