உடுமலையில் நடைபெற்ற மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ்!

உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் உள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை அமைத்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் சாலை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மலைவாழ் மக்கள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு, தளிஞ்சி, கோடந்தூர், காட்டுப்பட்டி உள்ளிட்ட 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரை, தொட்டில் கட்டி வனப்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர் தூக்கி வந்து சிகிச்சை பெற்றனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் படி சாலை வசதி கேட்டு ஏற்கனவே மாவட்ட வன உரிமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் வனத்துறை சார்பில் தீர்மானத்தில் கையெழுத்திடாததால் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது.



தற்போதைய அவசர தேவையை கருதி சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உடுமலையில் அமைந்துள்ள உடுமலை வன சரக அலுவலகத்தின் முன்பாக மலை கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவமனை,பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் பல்வேறு நடைமுறைகளை காரணம் காட்டி வனத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வரும் சலுகைகளை தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

2006 வன உரிமை சட்டத்தில் உள்ளது போல் பழங்குடியின மக்களுக்கு சாலை, குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை தொடர்ந்து 3-ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இதில் மாநில மலைவாழ் மக்கள் துணைத்தலைவர் சண்முகம் தலைமையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தளி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகளை மக்கள் சார்பாக எடுத்துரைத்த போது பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட வன உரிமை குழு கூட்டமாக மாற்றப்பட்டு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து தீர்மானம் தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டார்.



இதனை தொடர்ந்து கடந்த கூட்டத்தில் கையெழுத்திடாத வனத்துறை சார்பிலும் கையெழுத்திடப்பட்டதை அடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட வன உரிமை குழு கூட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டதை தொடர்ந்து அரசு விதிகளின்படி சாலை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் போராட்டக் குழுவினரிடம் உறுதி அளித்தார்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...