காலி மதுபாட்டிலுக்கு கிடைக்கும் விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு!

காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்களுக்கு கிடைப்பதில்லை என்றும், தென்னை விவசாயம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



கோவை: தென்னை விவசாயம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தென்னை சார்ந்த தொழில்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.



அரசாங்கமே தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னையை பாதிக்கும் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நோயால் பாதிக்கப்பட்டு பட்டுப்போன தென்னை மரங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தென்னை நல வாரியம் அமைத்திட வேண்டும், பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.



கோரிக்கை மனுவை அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காலி மது பாட்டில்களுக்கு கிடைக்கின்ற விலை கூட தேங்காய்க்கு கிடைப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தேங்காய், இளநீர், காலி மதுபாட்டில்கள் ஆகியவற்றை எடுத்து வந்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...