பொது பிரச்சனைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

கோவையில் மாற்றுக் கட்சியிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, திமுக கூட்டணி கட்சிகள் பொது பிரச்சனை குறித்து பேசுவது இல்லை என்றும் திமுக என்ன செய்தாலும் வாய் மூடி மௌனமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


கோவை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.



கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.



கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், அணைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி பேசியதாவது,



கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் எடப்பாடியார் தலைமையை ஏற்று இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.

மேலும் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக யாரும் மாற்றுக் கட்சியில் சேர்வதில்லை எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளர் ஆனதில் இருத்து அனைவரும் அதிமுகவில் தான் சேருகின்றனர் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை கடந்த அதிமுக ஆட்சியில் செய்ததாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக அரசு செய்யவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு போன்றவை மக்களை பாதித்துள்ளது.

எடப்பாடியார் தமிழகத்திற்கு முதல்வராக வர வேண்டும் என அனைத்து மக்களும் நினைக்கின்றனர். அதனால் தான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும், இளைஞர்களும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக ஐந்து பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

கல்லூரி நிர்வாகமும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு இதுபோன்று கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்.

இதேபோல் கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் காவல்துறை பெண் காவலர் துன்புறுத்தப்பட்டார். காவல் துறையில் தொடர்ந்து தற்கொலைகள் நடப்பதாகவும் காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.

டிஐஜி மன உளைச்சலில் இருந்தார் என்று அவரை கூப்பிட்டு விடுப்பு அளித்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு பல அழுத்தங்களை கொடுத்திருப்பதாக சொல்கின்றனர். நல்ல காவல்துறை அதிகாரியை இழந்திருக்கிறோம் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி கேட்டிருக்கிறார்.

சிபிஐ தலையிட்டு இதில் உள்ள உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

டிஐஜி மரணம் தொடர்பாக முரண்பாடான தகவல்கள் இருப்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஊழல்கள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் பேசுவதில்லை. பாஜகவின் அடிமை என அதிமுகவை பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், காவிரி பிரச்சனை வந்தபோது 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக.

பொது பிரச்சனை என வரும் பொழுது மக்கள் பக்கம் நிற்கின்றோம். திமுகவை எதிர்த்து யாரும் பேசுவதில்லை.

ஆனால் திமுக மோசமான ஆட்சி என மக்கள் முடிவு செய்து விட்ட சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்பொழுது நடந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும்.

அண்ணன் வைகோ, திருமாளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆகியோர் இப்போது பேசுவதே இல்லை. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள் திமுக என்ன செய்தாலும் அடிமையாக ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...