திருப்பூரில் ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் முதல்முறையாக 2 பெட்ரூம் வீடு 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது!

திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் உள்நாட்டு தொழில்நுட்பமான ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் 25 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பாளையக்காடு பகுதியில் முதன்முதலாக 2 பெட்ரூம் உள்ள வீட்டு கட்டிடத்தை இடிக்காமல் 25 அடிக்கு ஹைட்ராலிக் ஷிப்டிங் மூலம் நகர்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாளையக்காடு பகுதியில் முதன் முதலாக வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும் ஹைட்ராலிக் சிப்டிங் என்கிற உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக்கி பயன்படுத்தி கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து நகர்த்தும் செயல் முறையின் படி 2 பெட்ரூம் உள்ள கட்டிடத்தை 25 அடி தூரம் நகர்த்தப்பட்டது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டு கட்டடத்தை நகர்த்தும் பணியில் இதற்கென பிரத்யேகமாக பணிபுரியும் கட்டுமான வல்லுனர்கள், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத்தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.



அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு 8 அடி வீதம், 3 நாட்களுக்கு 24 அடி தூரம் நகர்த்தப்படுகிறது.



இந்த ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், 5 மாடி கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் எவ்வளவு தூரம் நகர்த்தியும், உயர்த்தியும் விடலாம் என கூறுகின்றனர்.

புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவை காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவு என செய்தியாளர்கள் சந்திப்பில் குமரன் டெமாலிசர்ஸ் நிறுவனர் பொன்லிங்கம் தெரிவித்தார்.

Newsletter

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...