பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி கருத்து!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக அனைத்து அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.



கோவை: பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார். 



மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகளின் கூட்டம் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 



இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் கனகசபாபதி, ஜி.கே.செல்வகுமார், விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக கடந்த ஒரு மாதமாக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான வரவேற்பும் ஆதரவும் அதிகமாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் துவங்கியுள்ளனர். 

ஆளும் திமுக குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைய மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை ஒவ்வொரு மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறோம். 

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பிகாரில் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ஊழல் கட்சிகளும் குடும்பக் கட்சிகளும் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் ஒற்றுமையாக நிற்க முடியாது.

தற்காலிக பலனுக்காக மட்டுமே அவர்கள் இந்த ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களால் ஒற்றை தலைமையிலான பிரதமர் வேட்பாளரின் கீழ் பணி செய்ய முடியாது. இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர், கூட்டணிக்கு யார் தலைவர் என தீர்மானிக்க முடியவில்லை. 

இந்தியா பல்வேறு விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது பல்வேறு பிரச்சனைகளும் உள்ளது. இதை சரி செய்ய சிறப்பான தலைமையை கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரால் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...