பக்ரீத் பண்டிகைக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத் மனு!

வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 29ஆம் தேதி பகரீந்-ஐ முன்னிட்டு கோவையின் செல்வபுரம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்கான மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன, 

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பபன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்ப்படுவதாக அறிகிறோம். 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் இந்த வருடம் நடைபெறாமல் முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...