கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம்

கோவை மாநகராட்சி மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.



கோவை: கோவையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.



ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இன்று ஒரு நாள் முழு உடல் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்த முகாம் ஜெம் மருத்துவமனையில். நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.



இந்த மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே, ECG இருதய பரிசோதனை கர்ப்பப்பை கோளாறுகள், கர்ப்பப்பை புற்றுநோய்கள், இரத்தசிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், சர்க்கரை அளவு, மஞ்சள் காமாலை, உப்பு சத்து அளவு, சிறுநீர் பரிசோதனை, கல்லீரல், கணையம், ஜீரண மண்டல நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.



மேலும் தொடர்ந்து சுமார் 750 நபர்களுக்கு வரும் நாட்களில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுமென மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இம்முகாமின் துவக்க நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு, துணைத் தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார், சுகாதார குழு மாரி செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...