கோவையில் கொள்ளையடிக்க இடையூறாக உள்ள நாய்களை திருடும் மர்ம நபர்கள்!

வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர் வளர்த்து வந்த 2 நாய்கள் அடுத்தடுத்த நாட்கள் காணாமல் போன நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர்கள் வந்து சென்ற தடம் இருந்ததால், கொள்ளையடிக்க இடையூறாக இருந்த நாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கொள்ளையடிக்க இடையூறாக உள்ள நாய்களை மர்ம நபர்கள் திருடி வருவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வடவள்ளி அடுத்த ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தனி வீட்டில், தனது கணவருடன் சில ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். 

இந்நிலையில், அவர் தனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வந்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும். 

இதனால் அவர்கள் பயமின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது நாய் ஒன்றை காணவில்லை கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். பின்னர் அது தானாக வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்று விட்டனர். மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. 

வன விலங்குகள் நடமாட்டம் அப்பகுதியில் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து உறங்கியுள்ளனர். பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியதாவது, வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள், நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் அவர்கள் அப்பகுதியில் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் நாய்களை திருடி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...