பெண் ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது பெருமிதமாக உள்ளது - கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மகிழ்ச்சி!

கோவையின் முதல் பெண் ஓட்டுனரா ஷர்மிளாவின் பேருந்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் பயணித்தார். தொடர்ந்து பேசியவர் பெண் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியும், பெருமிதமாகவும் உள்ளதாக தெரிவித்தார்.



கோவை:  பெண் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக உள்ளதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.  23 வயதான ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



இந்நிலையில் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணம் மேற்கொண்டார். 



பேருந்தில் பயணித்த வானதி சீனிவாசன் ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.



இது குறித்து செய்தியாளர்களிடம்  பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசியதாவது, கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என எண்ணி இருந்த நிலையில் இன்று நேரம் கிடைத்தவுடன் அதே பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பேருந்தில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது மீண்டும் பேருந்தில் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே சமயம்  பெண் பேருந்து ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணி தலைவியாக பெருமிதமாக உள்ளது. மேலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை கூற வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக உள்ளது.

இவர் அவர் தெரிவித்தார்.



பின்னர் இது குறித்து பேசிய பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேருந்தில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்தது.

தன்னுடன் சிறிது நேரம்  கலந்துரையாடி தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...