ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் - குவியும் பாராட்டு!

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் யுவ ஆதித்தன் (31) என்ற ஏரோநாட்டிகல் பட்டதாரி வடிவமைத்துள்ள சோலார் பேனல் உதவியுடன் இயங்கும் இ சைக்கிள் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் அடுத்ததாக இ ஆட்டோவை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதி ஒருவர் வடிமைத்துள்ள இ சைக்கிள் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏரோநாட்டிக்கல் பொறியியல் படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.



இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, பிளக் மற்றும் டைனமோ உதவியுடன் சார்ஜ் செய்ய முடியும். வழக்கமான சைக்கிள் ஆகவும், தேவைப்பட்டால் இ பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். போலீஸ் பேட்ரோல், நகர்புறத்தில் பயணம் உள்ளிட்டவைகளுக்கு இவை பயன்படும் என தெரிகின்றன. 



தற்போது முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலை குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை புத்தி கூர்மையுடன் பயன்படுத்தி இதுபோன்று இ பைக், இ ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கின்றன.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...