பல்லடத்தில் கொடி கட்டி பறக்கும் சட்ட விரோத மது விற்பனை - மக்கள் அதிர்ச்சி!

பல்லடம் பேருந்து நிலையம், பல்லடம் - திருப்பூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பேக்கரி மற்றும் பெட்டிக்கடைகளில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை கொடிகட்டி பறப்பதாகவும், பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் மையப் பகுதியான பேருந்து நிலையத்தின் முன்பு அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.



இந்த கடைக்கு அருகிலேயே இயங்கி வரும் பேக்கரியில் வைத்து சட்ட விரோதமாக காலை முதல் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



130 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெண்கள், கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வரக்கூடிய இடத்தில் வைத்து சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையால் வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர் அச்சத்தில் உறைந்துள்ளனர். 



இதேபோன்று பல்லடம் - திருப்பூர் சாலை சந்திப்பிலும் இருசக்கர வாகனங்களில் வைத்து மது விற்பனை நடைபெற்று வருகிறது.



பல்லடம் பகுதிகளில் அரசு மதுபான கடை பார்களில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனைக்கு காவல்துறையின் கெடுபடியால் தற்போது பெட்டிக்கடை, இருசக்கர வாகனங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக அதிக விலைக்கு காலையிலேயே மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டவிரோத மது விற்பனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...