வால்பாறை அருகே அருவியில் தவறி விழுந்த இளைஞர் உடல் மீட்பு!

வால்பாறை அருகே சுற்றுலா வந்த ஜாகர் (21) என்ற இளைஞர், பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து மாயமானார். இவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இளைஞர் ஜாகரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்து அருவியில் புகைப்படம் எடுக்கும் போது நீரில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது தோழியுடன் கடந்த 28ஆம் தேதி வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். அப்போது கால் தவறி ஜாகர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கூறப்படுகிறது.



அதைத்தொடர்ந்து காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் அவருடைய உடலை தீவிரமாக தேடி வந்தனர். 



இந்நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று உடல் மீட்கப்பட்டது, அவருடைய உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...