பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் - மூவர் மீது வழக்குப்பதிவு!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பால் பண்ணை நடத்தி வரும் அபிநயா என்பவர் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை அமைக்க மணிகண்டன் - பாரதி தம்பதியிடம் குத்தகை பணமாக ரூ.51.50 லட்சம் கொடுத்த நிலையில், பால் பண்ணை அமைக்க கூடாது என மிரட்டிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பால்பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவை ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் அபிநயா. இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். 

அங்கு மாட்டு பண்ணை வைப்பதற்கு ரூ.60 லட்சம் செலவாகும் என்று அபிநயா கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாராளமாக மாட்டு பண்ணை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இந்த மாட்டு பண்ணைக்கு மாத வாடகையாக ரூ.30 ஆயியம் எனவும் அட்வான்ஸ் தொகையாக ரூ.3 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவ்வாறாக 3 மாத காலமாக வாடகையை பெற்று கொண்டிருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் மீண்டும் இந்த இடத்திற்கு வாடகை வேண்டாம் என அவர்களுக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி குத்தகையாக மாற்றிக் கொள்ளலாம் என பத்து வருடத்திற்கு பேசி முடிவு செய்தனர். தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பாரதி வங்கி கணக்குகளிலும் ரூ.21 லட்சத்து 50 ஆயிரமும், பணமாக ரூ.30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபிநயா கொடுத்தார். 

இதற்கிடையில் அந்த வளாகத்தில் மாட்டுப்பண்ணையை ஆரம்பித்து 20 மாடுகளும், பால் விற்பனைக் கடை என கட்டுமான பணிகளை 65 லட்ச ரூபாய்க்கு மேற்கொண்டனர். ஆனால் மணிகண்டன் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்ய மறுத்து காலதாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மாட்டு பண்ணை நடந்து வந்த நிலையில் திடீரென சிலபேர் மாட்டு பண்ணையை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

வீரகேரளத்தை சேர்ந்த நிர்மலா, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பாலசிங்கம், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகியோர் போன் மூலமும் நேரிலும் வந்து பால்பண்ணை உரிமையாளர் அபிநயாவை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அபிநயா புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலசிங்கம், வீர கேரளம் பகுதியை சேர்ந்த நிர்மலா, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவிதா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...