சூலூர் அருகே மதுபான கூடத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடம் முறையான அனுமதியின்றியும், 24 மணி நேரமும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதால், அதனை பூட்டி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிரணி சார்பில் மதுபான கூடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுற்றுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சூலூர் அருகேயுள்ள கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. 

மேலும் சட்டவிரோதமாக 24 மணிநேரமு செயல்பட்டு வருவதாக கூறி மதுபான கூடம் முன்பு பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் கருமத்தம்பட்டி பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். 

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூடத்தை ஆய்வு செய்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...