கோவை ஈஷா யோகா மையத்தில் மே.30ல் பராமரிப்பு பணி - ஆதியோகி சிலை மூடப்படும் என அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ வரும்‌ மே 30ஆம்‌ தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்‌ தியானலிங்கம்‌ மற்றும்‌ ஆதியோகி வளாகங்கள்‌ அன்றைய தினம்‌ மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள்‌ அன்றைய தினம்‌ ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என ஈஷா நிறுவனம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்‌ உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின்‌ பல்வேறு நாடுகளில்‌ இருந்தும்‌ மக்கள்‌ வருகை தருகின்றனர்‌. குறிப்பாக, தியானலிங்கம்‌. லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர். 

இந்நிலையில்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம்‌ வரும்‌ மே 30-ஆம்‌ தேதி ஒரு நாள்‌ மட்டும்‌ மூடப்பட உள்ளது. 31-ஆம்‌ தேதி முதல்‌ பக்தர்கள்‌ வழக்கம்போல்‌ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...