கோவை சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது - ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

சூலூர் அடுத்த பள்ளபாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை பள்ளபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அப்பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சரவணன், அஸ்வின், சுஜித், மற்றும் கிரிதரன் உள்ளிடோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.40,000 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் சரவணன், அஸ்வின் மற்றும் சுஜித் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நடைபெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...