பேராசிரியர் பணி நியமன முறைகேடுகள் தொடர்பாக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாரதியார் பல்கலை., பட்டதாரிகள் உண்ணாவிரதம்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக துணைவேந்தரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அப்பல்கலைக் கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.



இந்நிலையில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் கணபதியை பணிநீக்கம் செய்யக் கோரியும், அப்பல்கலைக் கழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வடவள்ளி பகுதியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக் கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்திருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பேராசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டுமெனவும், முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தரையும் பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...