ரூ.2000 நோட்டை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம் - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து!

2000 ரூபாய் நோட்டு எங்கெங்கிருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம். 2000 ரூபாயை கடைக்காரர்களோ, வியாபாரிகளோ வாங்க மறுத்தால், வேண்டுமென்றே அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கலாம் என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் எந்த ஒரு காரணத்திற்காக அரசு மது கடைகளை நடத்துகிறார்களோ அதற்கு முரணாக தமிழகத்தில் கள்ளச் சாராய சாவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது என பாஜக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



தமிழகத்தில் எந்த ஒரு காரணத்திற்காக அரசு மது கடைகளை நடத்துகிறார்களோ அதற்கு முரணாக தமிழகத்தில் கள்ள சாராய சாவுகள் ஏற்பட தொடங்கி உள்ளது.

மதுவிலக்கை ஏன் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினால், அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய ஒரே பதில், கள்ளச் சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பதில் தெரிவித்து விட்டு அரசாங்கமே மதுக் கடைகளை நடத்திக் கொண்டு தற்போது கள்ள சாராய சாவுகள் நடைபெறுகிறது என்றால் முழுமையாக அரசு அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

அதேபோல் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், இத்தொழிலில் ஈடுபட்டாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பிற்குப் பிறகு நடவடிக்கை என்பது அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மதுவிலக்கு பிரிவு, அவர்களுக்கு சுதந்திரம் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

அதேபோல் தற்போது விமானத்தில் வரும் பொழுது உள்ளாட்சித் துறை அமைச்சரை சந்தித்தேன். அப்போது சாலைகளுக்காக நிதிகளை ஒதுக்கினோம் எனக் கூறினீர்கள். ஆனால், புதிய ரோடுகளை கண்ணில் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்து கோரிக்கை வைத்தேன். வரக்கூடிய காலத்தில் என் முன்னே சாலைகள் சரி செய்ய அதிகாரிகளிடம் பேசினார்.

காங்கிரஸ் கட்சியை நம்பி வருவதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை. மேடைக்கு செல்வார்கள் ஆனால் தேர்தல் களம் என்று வந்து விட்டால் வேறு. கர்நாடகா வெற்றியை வைத்து அவர்கள் கனவு காண்கிறார்கள். பேருக்காக கட்சியை நடத்துபவர்களை கூட்டிக் கொண்டு வந்து, வைத்தால் கூட அடுத்த முறை மோடி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது.

நாட்டில் இருக்கும் 95% மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டால் பிரச்னைகள் இல்லை. அதனை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ளவர்களுக்கு தான் பிரச்னை. எனவே 2000 ரூபாய் நோட்டு எங்கெங்கிருந்து வருகிறது என்பதை கண்காணித்தாலே நடவடிக்கை எடுப்பது சுலபம். 2000 ரூபாயை கடைக்காரர்களோ, வியாபாரிகளோ வாங்க மறுத்தால், வேண்டுமென்றே அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கலாம்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறார்கள். நல்ல சாராயம் குடித்தும் பலர் இறக்கின்றனர். மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிர் இழப்பு ஏற்படும் பொழுது இழப்பீடு தர வேண்டும். அமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கொடு என்கிறார். நானே டாஸ்மாக் கடைக்கு போய் தான் ஆதாரம் கொண்டு வரனும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...