கோவையில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் - ஒருமணிநேரமாகியும் உதவ யாரும் வராததால் பலி!

கோவை வடவள்ளி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சந்திரன்(50) என்ற தொழிலாளியை காப்பாற்ற யாரும் வராததால் ஒரு மணி நேரம் போராடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே பெயிண்ட் அடித்த போது சாரத்திலிருந்து தவறி விழுது தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டருடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50) மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க துவங்கி உள்ளனர்.



சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழ் விழுந்துள்ளார். நான்காவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து அவர் மதில் சுவரில் தலையின் பின் பகுதி மோதியத்தில் உயிருக்கு போராடி உள்ளார். உடன் வேலை செய்தவர்கள் என அருகில் செல்ல பயத்தில் நடுங்கபடியே நின்று உள்ளனர்.



ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரன் ஒரு மணி நேரம் ஆகியும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. யாரும் அருகில் உள்ள‌ மருத்துவ மனைக்கு அழைத்தும் செல்ல வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்துள்ளனர்.



அங்கு வந்து மருத்துவர்கள் அவரை பிசோதனை செய்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயிருக்கு போராடிய நபருக்கு உதவ யாரும் வராததால், தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...